கொரோனா வைரஸ் பாதித்த முதல் நோயாளி யார்? நோய் பரவியது எங்கிருந்து? வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த முதல் நோயாளிக்கும், நோய் பரவ காரணமாக கூறப்படும் வுஹான் நகர உணவுச் சந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹூபே மாகாணத்தின் வுஹான் நகர உணவுச் சந்தையில் இருந்தே முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீனா அரசு உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால் சமூக ஊடகங்களில், வுஹான் நகரில் அமைந்துள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாக மக்கள் தெரிவித்து வந்தனர்.

குறித்த தகவலை முற்றாக மறுத்துள்ள சீன அரசாங்கம், அதற்கான வாய்ப்பில்லை எனவும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலில், கொரோனா வைரஸ் முதன் முதலில் பாதிக்கப்பட்ட நபர் 70 வயது முதியவர் எனவும்,

அவர் பக்கவாதம் காரணமாக படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி, அவர் டிசம்பர் ஒன்றாம் திகதியே நோய்வாய்ப்பாட்டார் எனவும், சமீப நாட்களில் அவர் தொடர்புடைய உணவுச் சந்தைக்கு சென்று வந்ததற்கான வாய்ப்பில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

வுஹான் நகரில் அமைந்துள்ள முக்கிய மருத்துவமனையின் நிர்வாகி ஒருவரும், அவரது உடல்நிலை காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்தது, ஹுவானனுடன் எந்த தொடர்பும் இல்லை என நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும், டிசம்பர் 1 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொடர்பில் அறிகுறிகளுடன் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் காய்ச்சல் அல்லது சுவாச அறிகுறிகளை கண்டறியப்படவில்லை.

மேலும் ஜனவரி 2 ஆம் திகதிவரையான ஒரு மாத காலத்தில் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்ட 41 பேரில் 14 பேருக்கு,

விவாதத்துக்குரிய வுஹான் உணவுச் சந்தையுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்