முற்றிலும் மனித எலும்புகளால் எழுப்பப்பட்ட சுவர்: பீதியை கிளப்பிய சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பெல்ஜியத்தில் உள்ள பேராலயம் ஒன்றில் முற்றிலும் மனித எலும்புகளால் ஆன சுவர் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் அமைந்துள்ள 500 ஆண்டுகளுக்கு முந்தைய புனித பாவோ பேராலயத்திலேயே இந்த பயமுறுத்தும் சுவர் அமைந்துள்ளது.

குறித்த சுவரானது இளைஞர்களின் தொடை மற்றும் தாடை எலும்புகளால் கட்டப்பட்டுள்ளது, கட்டமைப்பின் இடைவெளிகளில் மண்டை ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

புதிய கல்லறைகளுக்கு இடமளிப்பதற்காக பேராலயத்திற்கு வெளியே உள்ள கல்லறையிலிருந்து எலும்புகள் சேகரிக்கப்பட்டதாகவும், எலும்புக்கூடுகளை எறிய முடியாது என்பதால் அதனால் சுவர் போன்று எழுப்பியிருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள்.

குறித்த பேராலயமானது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனால் எலும்புகள் கட்டுமானப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும்போது ஏற்கனவே 200 ஆண்டுகள் பழமையானவை என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்