ஒரு மாதத்திற்கு பிறகு தூரத்திலிருந்து பார்த்த தாய்... முகத்தை பார்க்க முடியாமல் கதறி அழுத 3 வயது மகன்! உருக வைக்கும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர், ஒரு மாதத்திற்கு பிறகு தூரத்தில் இருந்து தனது 3 வயது மகனை பார்த்த சம்பவம் வீடியோவாக வெளியாகி கலங்க வைத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொவிட்-19 என பெயர் வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் இன்று 29 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 1,869 பேர் பலியாகியுள்ளனர், 72,438 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோயை கட்டுப்படுத்த சீனா அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள் ஓய்வின்றி சேவை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கிழகக்கு சீனாவின் யான்ஜோவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் செவிலியரான லியு குயிங், ஒரு மாததத்திற்கு பிறகு தூரத்தில் இருந்த படி தனது 3 வயது மகனை சந்தித்த காட்சி இணையத்தில் வெளியாகி உருக வைத்துள்ளது.

குறித்த மருத்துவமனையில் கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் 300 சுகாதார ஊழியர்களில் லியூ குயிங்கும் ஒருவர். நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க சுகாதார ஊழியர்கள் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், லியு குயிங் ஒரு மாதமாக தனது 3 வயது மகனை பார்க்கவில்லையாம்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு அருகே உள்ள பலத்தின் மேலிருந்து மகன் அழுத படி பார்க்க, லியு குயிங் பாதுகாப்பு உடை அணிந்த படி மருத்துவமனைக்கு உள்ளே இருந்து மகனை பார்க்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்