பர்தா, தாடி இரண்டிற்கும் கைது..! முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான சீனாவின் ஒடுக்குமுறையை வெளிப்படுத்திய ஆவணம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான ஜின்ஜியாங்கில் இருக்கும் உய்குர் முஸ்லிம்களை பர்தா அணிவது அல்லது தாடியை வளர்ப்பது போன்ற காரணங்களுக்காக சீனா தடுத்து வைத்துள்ளது என பிபிசி பெற்ற கசிந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி பிரதேசமான ஜின்ஜியாங்கில் 3,000 க்கும் மேற்பட்ட மக்களின் அன்றாட நடவடிக்கைகளை விவரிக்கும் இந்த ஆவணம், முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான சீனாவின் ஒடுக்குமுறையை வெளிப்படுத்துகிறது.

அவர்கள் எத்தனை முறை தொழுகிறார்கள், எந்த மசூதிகள் வருகிறார்கள், எத்தனை முறை நோன்பு நோற்கிறார்கள் போன்ற தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளதாம்.

1 மில்லியனுக்கும் அதிகமான உய்குர்கள், கசாக் மற்றும் பிற சிறுபான்மையினர் கட்டாயப்படுத்தி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களை ‘தொழிற்கல்வி மையங்கள்’ என்று சீனா அரசாங்கம் அழைக்கிறது.

பர்தா அணிந்தவர்கள், தாடியை வளர்த்தவர்கள், தற்செயலாக வெளிநாட்டு வலைத்தளத்தை தங்கள் மின்னணு சாதனங்களில் கிளிக் செய்தவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஆவணம் காட்டுகிறது.

ஒவ்வொரு நபரின் சமூக ஊடக வட்டாரத்தையும் கண்காணித்து, அவர்கள் பேசிய மற்றும் உரையாடிய அனைவரையும் பட்டியலிட்டு, மேலும் அவர்களின் மத முறைகளைக் குறிப்பிடுகிறதாம்.

மிகவும் மதவாதி என்று கருதப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட நபர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தால் அல்லது வெளிநாட்டில் உறவினர் கொண்டிருந்தால், அவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள் என்று ஆவணம் காட்டுகிறது.

சிறுபான்மையினரை பெருமளவில் தடுத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகளை சீனா பலமுறை மறுத்து வருகிறது, மேலும், கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத செயல்களைச் செய்தார்களா என்பதுதான் கைதுக்கான காரணம் என பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது, .

பிபிசியின் கூற்றுப்படி, இந்த ஆவணம் ஜின்ஜியாங்கிற்குள் இருந்து மக்கள் நெட்வொர்க் மூலம் கசிந்து, பின்னர் ஆம்ஸ்டர்டாமில் தஞ்சமடைந்த உய்குர் பெண் ஒருவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

நிபுணர் ஒருவர், ஆவணத்தில் உள்ள பெயர்களையும் தகவல்களையும் அதன் உள்ளடக்கங்களை சரிபார்த்த பிற பொது அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்