தமிழகத்தில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர்! அவர் சொன்ன வித்தியாசமான காரணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஸ்வீடனை சேர்ந்த பிரபல தொழிலதிபர் தமிழகத்தில் பிச்சை எடுத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவையிலுள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு கிம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்துள்ளார்.

ஆனாலும் அவருக்கு மனநிம்மதி கிடைக்காமல் இருந்துள்ளது.

இதையடுத்து பொதுமக்களிடம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் பிச்சை கேட்டு பெற்று வருகிறார்.

இரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வணக்கம் வைத்து அவர்கள் கொடுக்கும் ஐந்து, பத்து ரூபாய் பணம் பெற்று, அதில் உணவு வாங்கி உண்கிறார்.

இதன் மூலம் தனக்கு மன நிம்மதி கிடைப்பதாக, கிம் கூறியுள்ளார். அவர் பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிடும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்