1981-லேயே கொரோனாவை கணித்த நபர்! அப்போது சொன்ன விடயங்கள் தற்போது நிஜத்திலும் நடப்பதாக ஆச்சரியம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனாவை கடந்த 1981ஆம் ஆண்டே நாவலாசிரியர் ஒருவர் கணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சீனாவில் ஆரம்பமான உயிர்கொல்லி கொரோனாவால் இதுவரை 1870க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 72000-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் தான் 1981-ல் அமெரிக்க நாவலாசிரியர் டீன் கூண்ட்ஸ் என்பவர் தன் ‘தி அய்ஸ் ஆஃப் டார்க்னெஸ்’ என்ற நாவலில் கொரோனாவை முன்னரே கணித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நாவலில் தற்போதைய கொரோனாவின் மையமான வூஹான் கதைக்களமாக்கப்பட்டுள்ளது. நாவலில் வூஹானில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாவலில் இந்த வைரஸுக்கு இடப்பட்ட பெயர் வூஹான் - 400 என்பதாகும்.

இந்த நாவலில் இந்த வைரஸை ‘துல்லிய ஆயுதம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, காரணம் இது மனிதர்களை மட்டுமே கொல்லக்கூடியது.

தன் மகனுக்கு என்னவாகியிருக்கும் என்று கவலைப்படும் ஒரு தாயாரின் கதைதான் இந்த நாவல். மகனின் பெயர் டேனி.

இந்த நாவலின் ஒரு முக்கிய பகுதியில், அந்த காலக்கட்டத்தில் லீ ஷேன் என்ற விஞ்ஞானி சீனாவின் முக்கியமான, அபாயகரமான புதிய உயிரியல் ஆயுதம் குறித்த தரவு அடங்கிய ஃபிளாப்பி டிஸ்குடன் அமெரிக்காவுக்குச் சென்றார். இதனை வூஹான் 400 என்று அழைக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது வைரஸின் ஆதார மையமான வூஹானில்தான் மைக்ரோபயாலஜி, வைராலஜி போன்றவற்றை ஆய்வு செய்யும் உயர்பாதுகாப்பு மண்டல விஞ்ஞான ஆய்வு மையங்கள் உள்ளன.

இந்த நாவலில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தற்போது சீனாவில் உண்மையாகவே நடப்பதாக சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்