நடுகாட்டில் தொலைந்த மாணவி.. 5 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!

Report Print Basu in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவில் காட்டில் காணாமல் போன பெண் ஐந்து நாட்களுக்கு பின் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் படித்து வரும் 26 வயதான யாங் சென், கடந்த பெப்ரவரி 12ம் திகதி தனது நண்பருடன் தாலேபுட்ஜெரா பள்ளத்தாக்கில் டிரெக்கிங் சென்றுள்ளார். இதன்போது இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் சென்றுள்ளனர்.

பின்னர், அவரது நண்பர் யாங் சென் காணாவில்லை என பொலிஸிக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, கடும் மழையில் பொலிஸ் அதிகாரிகள், டைவர்ஸ் மற்றும் உள்ளுர்வாசிகள் உள்ளிட்ட தேடல் குழுவினர் காட்டில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நம்பிக்கை கைவிடாமல் தொடர்ந்து வீரர்கள் தேடிய நிலையில், ஐந்து நாட்களுக்கு பின் பெப்ரவரி 17ம் திகதி ஜார்ஜ் நீர்வீழ்ச்சிக்கு அருகே யாங் சென்-ஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

காட்டிலிருந்து வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட யாங் சென், மருத்துவ சிகிச்சைக்காக ராபினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவமனையில் நலமுடன் யாங் சென் சிகிச்சை பெற்று வரும் புகைப்படமும் வெளியாகியுள்ளது..

7news

கண்டுபிடிக்கப்பட்ட போது அவர் நல்ல உற்சாகத்துடன் இருந்ததாகவும், மிகவும் நன்றாக தோன்றியதாக பொலிசார் கூறினார்.

ஐந்து நாட்களாக குகைகளில் தஞ்சமடைந்து, சிற்றோடைகளில் இருந்து சுத்தமான தண்ணீரைக் குடித்து யாங் சென் உயிர் பிழைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்