உணவுப் பொதியுடன் வேலைக்கு சென்ற இளைஞர்: அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் இளைஞர் ஒருவர் பணியாற்றும் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயதான சபீல் ரஹ்மான். ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் கட்டிடக்கலை பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

துபாயில் தமது சகோதரர் குடும்பத்துடன் வசித்துவரும் இவர், சம்பவத்தன்று காலை நேரத்துக்கான உணவுப் பொதியுடன், பணியாற்றும் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து ரஹ்மான் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தாருடன் எந்த மனக்கசப்பும் இல்லாத நிலையில், ரஹ்மான் தற்கொலை செய்து கொண்டுள்ளது விசித்திரமாக உள்ளது என நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, சம்பவத்தன்று குடியிருப்பில் இருந்து வெளியேறும்போது, ஓன்லைனில் ஆர்டர் செய்துள்ள புதிய மொபைல் போனைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களிடம் கூறிவிட்டே சென்றுள்ளார்.

இந்த விவகாரங்களால், ரஹ்மான் தற்கொலை செய்து கொண்டுள்ளது நம்ப முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே இது கொலையா தற்கொலையா என்பது தெரியவரும் என ரஹ்மானின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்