ஜப்பான் கடலில் நிற்கும் கப்பலில் 454 பயணிகளை தாக்கிய கொரோனா! அதிலிருக்கும் 2 இலங்கையர்கள் குறித்து முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற கப்பல் ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள இரண்டு இலங்கையர்களின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற கப்பல் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் 10 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 3,711 பேர் சிக்கி தவிக்கின்றனர்.

கப்பலில் உள்ள பயணிகளில் 454 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பலில் உள்ள இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் ஜப்பானின் டோக்கியாவில் உள்ள இலங்கை தூதரகம் சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கப்பலில் உள்ள இரண்டு இலங்கையர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்களுடன் இருவரும் தொடர்பில் இருப்பதாகவும் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்