தலைமை மருத்துவர் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டுள்ள சீன ஊடகங்கள்... சிகிச்சையில் இருக்கிறார் என்கிறார்கள் அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்கிய வுஹான் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவர் இன்னமும் சிகிசையில் தான் இருக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எது உண்மைச் செய்தி என்பது தெரியவில்லை.

வுஹானிலுள்ள Wuchang மருத்துவமனையில் தலைமை மருத்துவரான Dr Liu Zhiming உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், அவர் உயிருடன் இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை உலகுக்கு அறிவித்ததற்காக தண்டிக்கப்பட்ட Dr Li Wenliang என்பவர் இறந்துவிட்டதை மறைத்தனர் அதிகாரிகள். அடுத்த நாள்தான் அவர் உயிரிழந்த செய்தி வெளியே வந்தது.

அதேபோல் தற்போது வுஹான் தலைமை மருத்துவரின் மரணமும் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Dr Liu Zhiming இறந்த செய்தி வெளியானால், விமர்சனங்கள் வரும் என்ற பயத்தில், தற்போது அந்த உண்மையும் மறைக்கப்படுவதாக கூறி கடும் கோபமடைந்துள்ள பொதுமக்கள், உண்மைகளை மறைப்பதாக மருத்துவமனை மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்