நான்தான் மன்னரின் மனைவி... திருமணமாகி இரண்டே நாளில் மலேசிய மன்னரின் மொடல் மனைவிக்கு வந்த அதிரவைக்கும் அழைப்பு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மலேசிய மன்னர் சுல்தான் முகமதுவை திருமணம் செய்துகொண்டு இன்பமாக வாழ்வைத் தொடங்கலாம் என்ற கனவில் இருந்த ரஷ்ய மொடலான ஒக்சானாவுக்கு, திருமணமான இரண்டே நாளில் அதிரவைக்கும் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக தெரிவிக்கிறார் அவர்.

ரகசியமாக நடைபெற்ற விழா ஒன்றில் மன்னர் முகமதுவை திருமணம் செய்துகொண்டார் முன்னள் மொடலான ஒக்சானா.

ஆனால், திடீரென இஸ்லாமிய முறைப்படி ஒக்சானாவை விவாகரத்து செய்துவிட்டார் மன்னர்.

ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஆண் மொடல் ஒருவருடன் ஒக்சானா நேரலையில் பாலுறவு கொண்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் அதிர்ச்சியுற்ற மன்னர் விவாகரத்துக்கு முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையில் ஒக்சானா ஆண் குழந்தை ஒன்றுக்கு தாயானார்.

ஆனால் அந்த குழந்தைக்கு தந்தை தான் இல்லை என்றார் மன்னர். இப்படி விவாகரத்துக்குப் பின்னும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டியபடி இருந்தனர் இருவரும்.

இந்நிலையில், மன்னர் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார் ஒக்சானா.

முகமது தன்னிடம், தான் மட்டும்தான் மன்னருக்கு மனைவி என்று கூறியிருந்ததாகவும், தங்கள் திருமணச் சான்றிதழிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்த ஒக்சானா,

ஒரு நாள் மன்னர் குளியலறையிலிருக்கும்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், தான் அதை எடுத்தபோது, மறுமுனையில் ஒரு பெண், தான்தான் மன்னரின் மனைவி என்று கூறியதோடு, தன்னை திட்டியதாகவும், தனது கணவருக்கு தொலைபேசியில் அழைக்கும்போது தொலைபேசியை எடுக்காதே என்று தன்னை பயங்கரமாக கத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னர் குளியலறையிலிருந்து வர, என்ன நடக்கிறது என்று குழம்பிப்போய் அவரிடம் கேட்டால், அவர் அமைதியாக தொலைபேசியை வாங்கிக்கொண்டு அடுத்த அறைக்கு

சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கிறார் ஒக்சானா. பின்னர் அவரிடம் விசாரித்தபோது, அது தன்னுடைய முன்னாள் மனைவி டயானா பெட்ரா என்றும், விவாகரத்துக்குப் பின் அவருக்கு கொடுக்க வேண்டிய சொத்துக்கள் குறித்து கேட்டதாகவும் தெரிவித்துள்ளார் மன்னர்.

ஆகவே, தான் தான் ஒரே மனைவி என்று கூறி மன்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஒக்சானா.

ஒரு பக்கம், இருவருக்கும் இடையிலான விவாகரத்துக்குப் பிந்தைய ‘செட்டில்மெண்ட்’ வழக்கு இன்னமும் நடந்துகொண்டு இருக்கிறது, மறுபக்கம் ஒக்சானாவின் குழந்தைக்கு தந்தை யார் என்ற சர்ச்சையும் இன்னமும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே இருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்