ஆங்காங்கே குண்டு வெடிப்பு! மகள் பயத்தை போக்க அவளை சிரிக்க வைக்கும் தந்தை... உலகையே உலுக்கிய காட்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சிரியாவில் குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டு தனது 4 வயது மகள் பயப்படக்கூடாது என்பதற்காக அவளை திசை திருப்ப தந்தை செய்யும் செயல் மனதை உருக்கியுள்ளது.

சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை பயங்கரவாதிகள் என கூறும் அண்டை நாடான துருக்கி, அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

அந்த நாட்டு ராணுவம் சிரியா எல்லைக்குள் நுழைந்து குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது அங்குள்ள சில நகரங்களை துருக்கி ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த நகரங்களை அவர்களிடம் மீட்க குர்து போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இட்லிப் நகரில் ஆங்காங்கே குண்டு வெடிக்கிறது. இந்த நிலையில் அந்த நகரில் அப்துல்லா என்பவர் தனது 4 வயது மகள் செல்வாவுடன் தங்கியுள்ளார்.

அடிக்கடி குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டு செல்வா பயப்படுவாள் என்பதற்காக ஒரு விடயத்தை அப்துல்லா செய்துள்ளார்.

அதாவது ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் அது ஒரு விளையாட்டு என கூறி மகளை திசைதிருப்பும் அப்துல்லா அவளை சிரிக்க வைக்கிறார்.

குழந்தை செல்வாவும் குண்டு வெடிப்பது ஒரு விளையாட்டு என நினைத்து பயப்படாமல் சத்தம் போட்டு சிரிக்கிறது.

இந்த வீடியோவை அலி முஸ்தபா என்ற பத்திரிக்கையாளர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், என்ன ஒரு சோகமான உலகம் இது! மகள் பயத்தை திசைதிருப்ப இப்படியொரு விடயத்தை தந்தை செய்கிறார் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பெரியளவில் வைரலாகி கல் மனதையும் கரைக்கும் வகையில் உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்