கொரோனா வைரஸால் உயிரிழந்தவருக்கு முதன்முதலாக பிரேத பரிசோதனை செய்த சீனா!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், முதன்முதலாக ஒரு சடலத்திற்கு சீன மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

கோவிட் -19 கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போதுவரை உலகம் முழுவதிலும் 1700க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதோடு, 71000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் உலகமுழுவதிலும் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வுஹான் நகரில் வெடிப்பு ஏற்பட்டு ஏழு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், கொரோனா தாக்குதலால் உயிரிழந்த நோயாளிகளுள் ஒருவருக்கு, இறுதியாக சீனா முதல் பிரேத பரிசோதனையை நடத்தியுள்ளது.

'முக்கியமான' நடைமுறையின் தாமதத்திற்கு அரசாங்கமே காரணம் என முன்னணி மருத்துவர் ஒருவர் கூறியதை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது. இது மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நோயை நன்கு புரிந்துகொள்ள உதவும் என கூறப்படுகிறது.

வுஹானில் நேற்று இரண்டு சடலங்கள் பரிசோதிக்கப்பட்டன. மேலும் முடிவுகள் மேலதிக பரிசோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மருத்துவமனைகள் ஒப்புதல் பெற்ற பின்னர் பிரேத பரிசோதனைகள் நாட்டின் சட்டம் மற்றும் கொள்கைக்கு ஏற்ப நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரேத பரிசோதனை வுஹானின் ஜின்யின்டன் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு செய்யப்பட்டது, இரண்டாவது அறுவை சிகிச்சை மாலை 6:45 மணிக்கு முடிந்தது.

ஒவ்வொரு நடவடிக்கையும் மூன்று மணி நேரம் நீடித்தது. இதன் முடிவுகளை 10 நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று பேராசிரியர் லியு சீனா செய்தியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, ஜனவரி 11 ஆம் திகதி கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்திருப்பதை சீனா அறிவித்தது. வுஹானின் ஜினிண்டன் மருத்துவமனையில் ஜனவரி 9 ஆம் திகதி, மூச்சுத் திணறல் மற்றும் கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 61 வயதான ஒருவர் இறந்தார்.

அவரை தொடர்ந்து ஜனவரி 15 அதிகாலை 69 வயதான இரண்டாவது நபர் அதே மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்