கேக் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட இளம்பெண்: பார்வையாளர்கள் முன் உயிர் போன பரிதாபம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
514Shares

வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து முடிக்கவேண்டும் என்னும் ஆசை கொண்ட ஒரு பெண், கேக் சாப்பிடும் போட்டி ஒன்றின்போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.

மருத்துவ துறையின் உப துறை ஒன்றில் பயிற்சி பெற்ற Alexandra Yudina (23), கேக் சாப்பிடும் போட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

தனக்கு கொடுக்கப்பட்ட கேக்குகள் முழுவதையும் வாய்க்குள் திணித்த அவருக்கு, சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தரையில் மயங்கிச் சரிந்திருக்கிறார் Alexandra. அவருடன் இருந்த மருத்துவத் துறையில் பணி புரியும் நண்பர்கள் உட்பல சிலர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற அவர்களால் முடியவில்லை.

பின்னர் ஆம்புலன்ஸ் வந்து, மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்க எடுத்த முயற்சிகளும் பலன் தராமல் பரிதாபமாக பலியாகியுள்ளார் Alexandra.

வெளியாகியுள்ள வீடியோவில், Alexandraவுக்கு மூச்சுத்திணறி தடுமாறுவதைக் காணமுடிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்