கர்ப்பிணி பெண் உள்பட 22 பேரை கொன்று தள்ளிய கும்பல்: சிறார்களையும் சிதைத்த கொடூரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
171Shares

கமரூனின் ஆங்கிலோபோன் பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீர் தாக்குதலில் ஈடுபட்டதில் சிறார்கள் உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றம் குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில், ராணுவமே தொடர்புடைய தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள என்டம்போ கிராமத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆயுதமேந்தியவர்கள் திடீரென்று இந்தப் படுகொலையில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 22 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் 5 வயது குழந்தை உள்ளிட்ட 14 சிறார்களும் அடங்கும் என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த படுகொலையை நேரடியாக காண நேர்ந்த உள்ளூர் நபர் ஒருவர், நான்கு கல்லறைகளிலாக வெவ்வேறு பகுதிகளில் 21 சடலங்களை புதைக்க உதவியதாக பன்னாட்டு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களுக்கு இடையே 9 குடியிருப்புகளையும் சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமரூனில் பிரெஞ்சு மொழி பேசும் பெரும்பான்மை சமூகத்திற்கும் ஆங்கில மொழி பேசுவோருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் சண்டையில் இதுவரை 3,000 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 700,000 பேர் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்