24 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்ற மர்ம நபர்கள்: 3 இளைஞர்களை கடத்திச்சென்ற கொடூரம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
151Shares

மேற்கு ஆப்பிரிக்க நடானா புர்கினா பாசோவில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தேவாலய போதகர் உட்பட 24 பேரைக் கொன்றனர், மேலும் மூன்று பேரை கடத்திச் சென்றதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாகா மாகாணத்தில் உள்ள பான்சி நகரில் இந்த தாக்குதல் நடந்ததாக பவுண்டோர் கம்யூனின் மேயர் சிஹான்ரி ஒசங்கோலா பிரிகேடி தெரிவித்தார்.

ஏறக்குறைய 20 பேர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், 18 பேர் காயமடைந்தனர் என பிரிகேடி கூறினார்.

டோரி நகரில் உள்ள மருத்துவமனையில் பலியானவர்களைப் பார்வையிட்ட பின் ‘மக்களைப் பார்த்தபோது அது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது’.

துப்பாக்கி ஏந்தியவர்கள் கடைகளில் இருந்து எண்ணெய் மற்றும் அரிசியைக் கொள்ளையடித்தனர் மற்றும் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்ல உதவுமாறு கட்டாயப்படுத்தி மூன்று இளைஞர்களை அவர்கள் கடத்திச்சென்றதாக பிரிகேடி கூறினார்.

தேவாலயத்திற்கு தீ வைப்பதற்கு முன்பு தாக்குதல்தாரிகள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் கொன்றனர் என்று டோரி நகரில் உள்ள ஒரு அரசு பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்