8 வயதில் 80 வயதுக்கான முதுமையுடன் இருந்த அபூர்வ சிறுமி மரணம்! கண்ணீர் விட்ட தாய்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
181Shares

உக்ரைனில் 8 வயது சிறுமி மரபணு நோயால் 80 வயதான முதுமையுடன் காணப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது.

உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள புரோஜீரியா என்ற மரபணு நோயால் குழந்தை அன்னா பாதிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக அன்னா 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும் 7 கிலோ எடை கொண்ட அவள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் அந்த சிறுமியின் உடல் உள் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்தன. மருத்துவர்கள் கடுமையாக போராடியும் பலன் அளிக்காததால் சிறுமி அன்னா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கண்ணீருடன் அவரின் தாய் இவானா கூறுகையில், என் மகளை நல்ல உடல் நலத்துடன் இருக்க வைக்க, எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன்.

ஆனால் எங்களை விட்டு அவள் சென்றுவிட்டாள் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்