யாரும் இல்லாமல் ஆப்பிரிக்காவிலிருந்து ஐயர்லாந்து வந்த மர்ம கப்பல்..! மில்லியனில் ஒரு முறை நடக்கும் சம்பவம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
316Shares

ஆறு மாதங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க கடற்கரையில் மிதந்து கொண்டிருந்த மர்ம கப்பல் டென்னிஸ் புயலைத் தொடர்ந்து ஐயர்லாந்தில் கரை ஒதுங்கியுள்ளது.

தான்சானிய கொடியுடன் 77 மீட்டர் உயரமுள்ள எம்வி அல்டா சரக்கு கப்பல் ஞயிற்றுக்கிழமை பாலிகாட்டனில் கரை ஒதுங்கி இருந்ததை கண்ட உள்ளுர்வாசி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

டென்னிஸ் புயல் காரணமாக கப்பல் பாலிகாட்டனில் கரை ஒதுங்கியிருப்பதாகவும், சோதனை மேற்கொண்டதில் உள்ளே யாரும் இல்லை.

மேலும், கப்பல் அந்தப் பகுதியை மாசுபடுத்தவில்லை என்றும் ஐரீஷ் வாட்டர்போர்டு கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன் ஆப்பிரிக்க கடலில் மிதந்த கப்பல். அங்கிருந்து ஸ்பானிஷ் கடற்கரைக்கு மேற்கே, இங்கிலிஷ் கடற்கரைக்கு மேற்காகவும், ஐரிஷ் கடற்கரை வரையிலும் வந்துள்ளது.

இது மில்லியனில் ஒரு முறை நடக்கும் சம்பவம் என பாலிகோட்டன் ஆர்.என்.எல்.ஐ லைப் போட் ஆபரேஷன்ஸ் மேனேஜர் ஜான் டட்டன் கூறினார்.

இதற்கு முன்பு இப்படி கைவிடப்பட்ட கப்பல் எதையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை. மீன்பிடிக் கப்பலால் இது எவ்வாறு கண்டறியப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

1976 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சரக்குக் கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலைச் சுற்றி யாரும் இல்லாமல் எப்படி மிதந்தது என்பதை மர்மம் சூழ்ந்துள்ளது.

பெர்முடாவின் தென்கிழக்கில் 1,300 மைல் தொலைவில் இந்த கப்பல் 10 பணியாளர்களுடன் 2018 செப்டம்பரில் காணப்பட்டது. கப்பலில் இருந்த 10 குழுவினரை அமெரிக்க கடற்படையினர் மீட்டன்ர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்