‘அட்டூழியம்’... தயுவு செய்து இதை நிறுத்துங்கள்..! ரஷ்யாவுக்கு டிரம்ப் கோரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

சிரிய ஆட்சியின் ‘அட்டூழியங்களுக்கு’ ரஷ்யா தனது ஆதரவை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும், சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியாவின் இட்லிப்பில் இடம்பெற்று வரும் வன்முறை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசாத் ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யாவின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை தெரிவித்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தின் படைகள் ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு பிராந்தியமான இட்லிப்பில் கிளர்ச்சிப் படைக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட தாக்குதலில் வெற்றிகளைப் பெற்றன.

மேலும். இட்லிப் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது என அல்-ஆசாத் படைகள் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்