2020-ல் வைரஸ் தாக்கும்... மீண்டும் வரும்! சீனாவை மிரட்டி வரும் கொடிய நோயை முன்பே கணித்த ஆதாரம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
864Shares

சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முன்னரே கணிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனா மட்டுமின்றி இந்த கொரோனா வைரஸால் உலகில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளதால், இதைக் கட்டுப்படுத்த உலகநாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் குறித்து Dean Koontz என்பவர் 1981-ஆம் ஆண்டு எழுதிய நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்திற்கு The Eyes of Darkness என்று பெயர், அதில், சீனா இராணுவ ஆய்வகத்தில், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் புதிய வைரஸ் ஒன்று உருவாக்குகிறது.

Twitter

இந்த ஆய்வாக சீனாவில் வுஹானில் ஒரு முரண்பாடாக(தெரியாமல்) வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு வுஹான் 400 என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு சரியான ஆயுதம், ஏனெனில் இது மனிதர்களை மட்டுமே பாதிக்கும், இது மனித உடலுக்கு வெளியே ஒரு நிமிடத்திற்கும் மேலாக உயிர்வாழ முடியாது.

இது ஒவ்வொருவர் வழியாக பரவக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு கற்பனையான நாவலை கொண்டு எழுதப்பட்டதாக கூறப்பட்டாலும், தற்போது இதில் குறிப்பிட்டது போன்றே நடப்பது ஆச்சரியமாக உள்ளது.

Twitter

இந்த நாவலில் மட்டுமின்றி lindsay harrison என்பவர் எழுதிய sylvia browne end of days என்ற நாவலில், 2020-ஆம் ஆண்டில் ஒருவித நிமோனியா நோய் தாக்கும் எனவும், இது உலகக் முழுவதிலும் பரவும் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் இந்த நோய் நுரையீரல் வழியாக தாக்கும் என்றும் இதே போன்ற பாதிப்பு அடுத்த 10 வருடங்களுக்கு பின் வரும் என்று குறிப்பிட்டுள்ளது.

Twitter


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்