பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி! நாட்டையே உலுக்கிய சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் Madiha என்ற 8 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும், சிறுமி கிடைக்காத காரணத்தினால், குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், Khyber Pakhtunkhwa மாகாணத்தின் Hangu மாவட்டத்தில் இருக்கும் Saro Khel கிராமத்தில் புதர் ஒன்றில் Madiha ஒருவர் கொடூரமான முறையில் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டதால், அங்கிருக்கும் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிசார் உடனடியாக போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சிறுமியின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அதன் முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும், நிச்சயம் குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் ஒரு சிறுமியை கூட விட்டு வைக்கமாட்டார்களா? Madiha-வுக்கு நிதி வேண்டும் என்று கூறி சமூகவலைத்தளங்களில் பாகிஸ்தான் நாட்டினர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் நம் நாட்டில் தண்டனை சரியாக இல்லை, இதனாலே இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

Madiha-வின் மரணத்தால் நெட்டிசன்கள் #JusticeforMadiha and #HangtheRapists என்ற ஹாஷ்டேக்கை டுவிட்டரில் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்