கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னரே தெரியும்: சீன ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஜின்பிங் முன்னரே அறிந்திருந்தார் எனவும், முதல் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா பாதிப்புக்கு இதுவரை 1,669 பேர் மரணமடைந்துள்ள நிலையில்,

உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜின்பிங், கடுமையான நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

கடந்த ஜனவரி 7 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தில் இதை ஜனாதிபதி ஜின்பிங் சுட்டிக்காட்டியுள்ளதும் தற்போது வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி ஜனவரி 20 ஆம் திகதி நோய் கட்டுப்பாட்டுத் துறைக்கு விழிப்புடன் இருக்கவும், பாதிப்பைக் கண்காணிக்கவும் குறிப்பாக அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கட்சி குழு உறுப்பினர்கள், உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் கொரோனா பாதிப்பு பரவலான பின்னர் ஜனாதிபதி ஜின்பிங் குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

வுஹான் முடக்கப்படும் வரை உள்ளூர் நிர்வாகம் கொடிய வைரஸ் பற்றிய தகவல்களை எவ்வாறு அடக்கியது என்பது குறித்து மில்லியன் கணக்கான பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்