அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய தளபதிக்கு சிலை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ஈரானிய உயர் இராணுவ தளபதி சுலைமானிக்கு லெபனான்-இஸ்ரேலிய எல்லையில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஈராக்கிய ஷியா போராளி தளபதி அபு மஹ்தி அல் முஹந்திஸ் உடன், ஈரானிய உயரடுக்கு இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி 3ம் திகதியன்று ஈராக் விமான நிலையம் அருகே, அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் ஏவுகணைகளை வீசி, ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதில் எந்த உயிர்சேதமும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தாலும் கூட, அங்கிருந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் 109 பேர் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்களால் பாதிக்கப்பட்டிருப்பதை வாஷிங்க்டன் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட சுலைமானி நினைவாக ஹெஸ்பொல்லா தெற்கு லெபனானில் சிலை ஒன்றை நிறுவியுள்ளார்.

இந்த சிலை இஸ்ரேலை நோக்கி சுட்டிக்காட்டியவண்ணம் அமைந்துள்ளது. சுலைமானியின் படுகொலை இஸ்ரேலில் இருந்து "ஜெருசலேம் விடுவிக்க" வழிவகுக்கும் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இராணுவ தளபதி ரமேசன் ஷெரீப் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்