அமெரிக்கா இராணுவ தளம் மீது சரமாரி ராக்கெட் தாக்குதல்..! தலைநகரில் தொடரும் பதற்றம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தலைமையிலான கூட்டுப்படையின் இராணுவத் தளம் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராக்கெட் தாக்குதலில் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து அமெரிக்க அதிகாரி உடனடியாக தகவல் ஏதும் கூறவில்லை.

2019 அக்டோபர் மாதத்திலிருந்து ஈராக்கில் அமெரிக்க நலன்களுக்கு எதிரான 19 வது தாக்குதல் இதுவாகும். ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து பாக்தாத்தில் உள்ள பசுமை மண்டலத்தை விமானம் வட்டமிட்டுள்ளது.

இத்தாக்குதலை அடுத்து உயர் பாதுகாப்பு கொண்ட அமெரிக்க தூதரகத்தில் உள்ள எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

இத்தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் ஈராக்கின் அரசு பாதுகாப்புப் படைகளில் அதிகாரப்பூர்வ இராணுவ பிரிவான ஹஷேத் அல்-ஷாபிக்குள் இருக்கும் ஈரான் ஆதரவுப்பெற்ற குழுக்கள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் உடனடியாக மத்திய கிழக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஈரான் ஆதரவுப்பெற்ற பிரிவுகளில் ஒன்றான ஹரகத் அல்-நுஜாபா, அமெரிக்கப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு கவுண்டனை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த ராக்கெட் தாக்குதல் நடந்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்