கொரோனாவை எதிர்த்து போராடிய 97 வயது நபருக்கு நோய் குணமானது! வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 97 வயது நபர் தற்போது நோயிலிருந்து குணமாகியுள்ளார்.

சீனாவில் கொரோனாவால் 69000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மிக வயதானவராக இந்த 97 வயது முதியவரே கருதப்படுகிறார்.

Nanjing நகரை சேர்ந்த இந்த முதியவர் இதுவரை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வுகான் நகருக்கே சென்றதில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்த காரணத்தாலேயே 97 வயது முதியவரை அந்த வைரஸ் தாக்கியுள்ளது.

உயிர்கொல்லி நோய் தாக்கிய பின்னர் மிக மோசமான உடல்நிலையுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் உயிர் பிழைப்பது கடினம் என கூறப்பட்ட நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.

அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியில் கொண்டு வரப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்