குறையும் கொரோனா வைரஸ்.. சீனா எடுத்துள்ள நடவடிக்கையால் திருப்பம்.. ! தேசிய சுகாதார ஆணையம் முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 29 உலக நாடுகளுக்கு பரவியுள்ளது.

ஆசிய நாடான சீனாவில் பிப்ரவரி 15ம் திகதி வரை கொரோனா வைரஸால் சுமார் 1,665 பேர் உயிரிழந்துள்ளனர். 68,507 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியே ஜப்பான், ஹொய்கொங், பிரான்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் என உலகளவில் 1,669 பேர் உயிரிழந்துள்ளனர். 69,276 பேருக்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 15ம் திகதி மட்டும் கொரோனாவிற்கு 143 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயை கட்டுப்படுத்த சீனா அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி பெங் தெரிவித்தார்.

பிப்ரவரி 12ம் திகதி மட்டும் 14,113 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்ட நிலையில் 15ம் திகதி 2,097 ஆக குறைந்துள்ளது. கொரோனா பரவுவது இனி படிபடியாக குறையும் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்