கணவன் உணவை ஊட்டினால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடித்த மனைவி! கொரோனா பாதிப்பிலும் நெகிழவைத்த வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸால் தம்பதி பாதிக்கப்பட்ட நிலையில், மோசமான உடல்நிலையிலும் கணவர் மனைவியை அருகில் இருந்து கவனித்து கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனாவால் 1669க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், இதோடு 69000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த வயதான தம்பதியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனைவி படுக்கையில் இருந்தபடி கணவன் தனக்கு உணவை ஊட்டினால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடித்துள்ளார்.

இதையடுத்து தனது நோயையும் பொருட்படுத்தாத கணவன், படுக்கையில் இருந்து எழுந்து வந்து மனைவிக்கு உணவு ஊட்டினார்.

இதோடு அவரை அருகில் இருந்தபடி கவனித்து கொண்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்