உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலாக உருவான பகுதி இதுதான்: வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகரில் அமைந்துள்ள ஒரு ரகசிய ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வெளவால்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்தே உலக நாடுகளை உலுக்கும் கொடிய கொரோனா வைரஸ் பரவியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் அமைந்துள்ள கால்நடைகளுக்கான சந்தைக்குள் இருந்து கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது என்று சீன அரசாங்கம் சாதித்துவரும் நிலையில்,

குவாங்சோவில் உள்ள தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வைரஸின் சாத்தியமான தோற்றம் வுஹான் நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து (WCDC) இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

வுஹான் நோய் கட்டுப்பாட்டு மையத்தில் ஆராய்ச்சிகளுக்காக சுமார் 605 வெளவால்கள் பிடித்து வரப்பட்டதாகவும்,

ஒருமுறை முக்கிய ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளவால் தாக்குதலுக்கு இரையானார் எனவும், அந்த தாக்குதலுக்கு பின்னர் வெளவாலின் ரத்தம் அவரது உடம்பில் இருந்துள்ளது எனவும் கொரோனா தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெளவால் தாக்குதலுக்கு பின்னர், அந்த ஆராய்ச்சியாளர் சுமார் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.

சம்பவம் நடந்த ஆய்வகமானது வுஹான் நகரின் முக்கிய கால்நடை சந்தைக்கு 280 மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

மட்டுமின்றி இந்த ஆய்வகத்தின் நேரெதிரே சீனா அரசுக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்றும் அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் பணியாற்றும் சில மருத்துவர்களுக்கே கொரோனா பாதிப்பு துவக்கத்தில் கண்டறியப்பட்டது.

இது இவ்வாறிருக்க, 2003 ஆம் ஆண்டு சார்ஸ் என்ற வைரஸ் பரவ காரணமாக ஆய்வகம் ஒன்றும் வுஹான் கால்நடை சந்தையில் இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா கோர தாண்டவத்திற்கு இதுவரை 1,669 பேர் மரணமடைந்துள்ள நிலையில், சுமார் 69,270 பேர் உலகமெங்கும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் 9,660 பேர் குணமடைந்துள்ளனர் என்றபோதும் 11,299 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்