சுலைமானியை போன்றே படுகொலை செய்வோம்: ஈரான் புதிய தளபதியை எச்சரித்த அமெரிக்கா!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

படுகொலை செய்யப்பட்ட குவாசிம் சுலைமானி வழியை பின்பற்றினால், புதிய தளபதியும் அதே முடிவை சந்திப்பார் என ஈரானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி எச்சரித்துள்ளார்.

டிசம்பர் 27 அன்று ஈராக்கில் ஒரு தளத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒரு அமெரிக்க சிவில் ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜனவரி 3ம் திகதியன்று பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையம் அருகே, அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேருடன் சேர்ந்து ஈரான் உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவமானது இருநாடுகளுக்கு மத்தியில் பதட்டங்களை அதிகரித்திருந்த நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் லண்டனை தளமாகக் கொண்ட ஆஷர்க் அல்-அவ்சாத் அரபு மொழி செய்தித்தாளிற்கு பேட்டியளித்த ஈரானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி, படுகொலை செய்யப்பட்ட ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானிக்கு பதில், "அமெரிக்கர்களைக் கொல்லும் அதே வழியைப் பின்பற்றினால்" அதேபோன்ற முடிவை சந்திப்பார் என புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் இராணுவ உயர்தளபதி எஸ்மெயில் கானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அதிபர் [டொனால்ட் டிரம்ப்] எப்போதும் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க தீர்க்கமாக பதிலளிப்பார் என்று கூறியுள்ளார். அமெரிக்காவைத் தாக்கி, தப்பிக்க முடியாது என்பதை ஈரானிய ஆட்சி இப்போது புரிந்து கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...