சாதாரண தலைவலி என நினைத்தேன்..! உலகையே அச்சுறுத்தும் கொடிய வைரஸிலிருந்து மீண்ட முதல் நபர்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

உலகையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரோனா வைரஸில் இருந்து சீன நபர் ஒருவர் மீண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வகையை சேர்ந்த புதிய வைரஸானது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் மத்திய சீன மாகாணமான ஹூபேயில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், சீனாவில் 518 பேர் உட்பட உலகம் முழுவதிலும் குறைந்தபட்சம் 526 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் வுஹான் அரசு அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் பொது இடங்களில் முகமூடி அணிய உத்தரவிட்டுள்ளது.

அதேபோல இந்த வைரஸ் தாக்குதல் அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் பிராந்தியங்களிலும் பரவியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வுஹான் மாகாணத்தை சேர்ந்த 23 வயதான ஹுவாங் என்ற குடும்பப்பெயரால் அறியப்படும் நபர், வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.

ஹுவாங், ஹுவானன் கடல் உணவு மொத்த சந்தைக்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் அமைந்துள்ள போக்குவரத்து மையத்தில் வேலை செய்து வருகிறார். இந்த பகுதியானது உயிர்கொல்லி வைரஸின் இனப்பெருக்கு பகுதி என்று கருதப்படுகிறது.

இவர் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதியன்று, சளி, தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் உடல்வலிமை இல்லாததை போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகளை உணர்ந்துள்ளார்.

அதனை சாதாரண சளி என நினைத்திருந்த அந்த நபர் விடுப்பு எடுத்துக்கொண்டு உள்ளூர் மருத்துவனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை தெளிவாக மருத்துவரிடம் குறிப்பிடாததால், அவருக்கு பென்சிலின் ஜி ஊசி மற்றும் சில மருந்துகள் மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆனால் சிகிச்சை முடிந்து மூன்று நாட்கள் கழிந்தும்கூட அவரது உடல்நிலை மேம்படவில்லை. இதற்கிடையில் அதிக நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டதாக கருதிய அந்த நபர், மீண்டும் பணிக்கு செல்வதற்காக ரயில்நிலையத்திற்கு ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருடைய அவருடைய உடல்நிலை இன்னும் மோசமடைந்துள்ளது. அந்த நபர் மேலும் பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்குத் திரும்பினார். மேலும் அவரது கல்லீரல் செயல்பாடு சோதனைகளில் அசாதாரண அளவீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஜனவரி 1 ஆம் திகதி ஹுவாங் இரண்டாவது சோதனைக்காக நகர யூனியன் மருத்துவமனைக்குச் சென்றபோது நிமோனியா இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

மருத்துவர்கள் அவரது அறிக்கைகளை மறுஆய்வு செய்தபின், அவரது பணியிடங்கள் கடல் உணவு சந்தைக்கு அருகில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பின்னர், அவரை ஜின்யின்டன் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பெரும்பாலான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மத்தியில், ஹுவாங்கும் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவர் தீவிர சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், தனது இளம்வயதும், சகோதரி அளித்த உன்னதமான கவனிப்புமே விரைவில் உடல்நிலை சரியாக காரணம் எனக்கூறியுள்ளார். மேலும் மருத்துவமனை ஊழியர்களை நட்பு, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பாளிகள் என விவரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...