உலக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் பாம்புகள் மூலம் பரவுகிறது! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் பாம்புகள் மூலம் பரவியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனா தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த வைரஸானது தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் வேகமாக பரவுவதால் உலக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வைரஸானது மனிதர்களை மட்டுமின்றி ஒட்டகங்கள், பூனைகள், எலிகளையும் தாக்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாம்புகள் மூலம் பரவி உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது, சீனாவில் உவான் நகரில் உள்ள கடல் உணவு சந்தை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த சந்தை உள்ளூர் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய வைரஸ் உவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் விகாரங்களின் மரபணுக்களை அவர்கள் ஆராய்ந்தபோது, கொரோனா வைரஸால் பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் வைரஸ் புள்ளியாக செயல்பட்டன.

எங்கள் பரிணாம பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகளில் கொரோனா வைரஸ் பரவ மிகவும் சாத்தியமான வனவிலங்கு, நீர் பாம்பு என்று முதன்முறையாக தெரியவந்து உள்ளது மருத்துவ வைராலஜி ஜர்னலில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது.

இதனிடையில் இது தொடர்பில் சர்வதேச அக்கறையின் ஒரு பகுதியாக பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்கலாமா வேண்டாமா என்பது பற்றிய முடிவு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்