உயிரோடு சிக்கிய 4 வயது சிறுமி! வான்வெளி தாக்குதலினால் நடந்த கொடூரத்தின் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சிரியாவில் ரஷ்யா தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில், சிறுமி ஒருவர் கட்டிட இடுபாடுகளுக்கிடையே சிக்கிய நிலையில், அவர் அதில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.

வடமேற்கு சிரியாவில் பிரிவினைவாதிகள் மீது ரஷ்யா மற்றும் அரசுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குத​லில் 18 பேர் பலியாகியிருப்பதாகவும், இந்த தொடர் தாக்குதலால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி எல்லையில் தஞ்சம் அடைந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

மக்கள் மீதான இந்த கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை சிரியா மற்றும் ரஷ்ய நாடுகள் மறுத்துள்ள நிலையில், இந்த வான்வெளி தாக்குதலினால் சிறுமி ஒருவர் காப்பாற்றப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதில், குறித்த சிறுமியின் பெயர் Dania எனவும் 4 வயதான இவர், ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலினால் இடுபாடுகளுக்கிடையில் சிக்கியவர் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் தொடர் தாக்குதலினால் 44 பேர் வரை பலியாகியிருப்பதாகவும், அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் அலேப்பாவிலும், Idlib மாகாணத்தில் 9 பேரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்து உடனடியாக மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

(Picture: The White Helmets)

அலேப்பாவில் இருக்கும் மீட்பு படையின் தலைமை அதிகாரிகள் கூறுகையில், இது ஒரு பயங்கரமான வாரம் என்று கூறுவேன். ஏனெனில்

சிரியர்களுக்கு மரணம், குண்டுவெடிப்பு, அழிவு, இடப்பெயர்ச்சி மற்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்களின் அழுகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.

(Picture: The White Helmets)

கடந்த ஆறு நாட்களில் மட்டும் 44 பேர் இறந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக கூறியுள்ளார்.

இந்த வான்வெளி தாக்குதலினால் தந்தையிடம் அவருடைய மகன், ஏன் நாம் தப்பி ஓடுகிறோம்? எனக்கு பள்ளியை விட்டு வர விருப்பமில்லை, குழந்தைகள் எல்லோரும் ஏன் அழுகின்றனர் என்று கேட்டதாகவும், அதற்கு அந்த தந்தை என்னால் எந்த பதிலும் கூற முடியாமல் தவித்ததாக மிகுந்த வேதனையுடன் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

(Picture: The White Helmets)

(Picture: The White Helmets)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...