வானில் திடீரென்று தோன்றிய ஏலியன்கள்? பீதியில் மக்கள்! கமராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் திடீரென்று கருப்பு வளையம் ஒன்று வானில் தோன்றியதால், அதில் ஏலியன்கள் வருவார்கள் என்ற பீதி அந்நாட்டில் தற்போது வைரலாகி வருகிறது.

உலகில் ஏலியன்கள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை உறுதியாக காட்டப்படவில்லை, அப்படி ஏலியன்கள் இருக்கிறது, நான் பார்த்திருக்கிறேன் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்று வரை பூமியில் ஏலியன்கள் பற்றி ஏதேனும் ஒரு தகவல் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

அந்த வகையில், பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பகல் நேரத்தில் திடீரென்று வானில் பெரிய கருப்பு வளையம் ஒன்று தோன்றியது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த அந்த கருப்பு வளையம், மெதுவாக நகர்ந்து சென்ற படி இருந்தது.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட, பொதுமக்கள் சிலர் ஏலியன்கள் இதில் தான் வருவார்கள் என்ற பீதியை கிளப்பியுள்ளனர்.

ஆனால் , என்ன காரணத்துக்காக இத்தகைய வளையங்கள் தோன்றின என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதே போன்று சில மாதங்களுக்கு முன் கஜகஸ்தான் நாட்டிலும் கருப்பு வளையம் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், எதற்காக இந்த வளையங்கள் தோன்றுகின்றது என்பதை மட்டும் அவர்கள் இதுவரை வெளிப்படையாக கூறவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...