நைஜீரிய கிறிஸ்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் இணைந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த ஒரு சிறுவன், நைஜீரிய கிறிஸ்தவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் இணைந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த ஒரு சிறுவன் நைஜீரிய கிறிஸ்தவ இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்று அதிர்ச்சிகரமான வீடியோ வெளிவந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் அமக் 'செய்தி நிறுவனம்' வெளியிட்ட கொடூரமான காட்சிகள், நைஜீரியாவின் போர்னோவில் அடையாளம் தெரியாத வெளிப்புற பகுதியில் சுமார் எட்டு வயதுடைய ஒரு சிறுவன் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதைக் காட்டுகிறது.

வீடியோவில் உள்ள சிறுவன் மற்ற கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறான்: 'சிந்தப்பட்ட எல்லா இரத்தத்திற்கும் பழிவாங்கும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம்.'

துன்பகரமான காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு படத்தை ஜிஹாதி குழுக்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பான SITE புலனாய்வு குழு ஆன்லைனில் பகிர்ந்துள்ளது.

SITE புலனாய்வுக் குழுவின் இயக்குனர் ரீட்டா காட்ஸ், வீடியோவைப் பற்றி கூறுகையில், 'ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் ஒழுக்கக்கேட்டுக்கு முடிவே இல்லை.'

இந்த வீடியோ வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோவில் எடுக்கப்பட்டதாகவும், சிறுவன் இஸ்லாமிய மாநில மேற்கு ஆபிரிக்கா மாகாணம் (ISWAP) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் கட்ஸ் கூறியுள்ளார்.

விளம்பரப்படுத்தப்படும் நோக்கில் எடுக்கப்படும் வீடியோக்களில், கைதிகளின் கொலைகளைச் செய்ய ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கமாக 'கலிபாவின் குட்டிகள்' என அழைக்கப்படும் சிறார்களை பயன்படுத்துகிறது.

2016 ல் நைஜீரிய இஸ்லாமிய குழு போகோ ஹராமில் இருந்து ஒரு பிரிவு பிரிந்த பின்னர், இஸ்லாமிய அரசின் மேற்கு ஆபிரிக்கா கிளை உருவாக்கப்பட்டது.

கடந்த மாதம், பதினொரு கிறிஸ்தவ பணயக்கைதிகள் கிறிஸ்மஸ் தினத்தன்று போர்னோவில் ISWAP பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் 13 பிணைக் கைதிகள், 10 பேர் கிறிஸ்தவர்கள் மற்றும் மூன்று முஸ்லிம்கள் என்று நம்பப்படுகிறது. ISWAP அவர்கள் இரண்டு முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறினர்.

ஈராக் மற்றும் சிரியாவில் தங்கள் தலைவர்களான அபுபக்கர் அல் பாக்தாதி மற்றும் அபுல்-ஹசன் அல் முஹாஜிர் ஆகியோரைக் கொன்றதற்கு பழிவாங்குவதற்காக கைதிகளை கொன்றதாக பயங்கரவாத குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...