இடைவிடாமல் குண்டு மழை பொழியும் போர் விமானங்கள்... மாகாணம் முழுவதும் குவியும் பிணங்கள்: தொடரும் கோரம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

வடமேற்கு சிரியாவில் செவ்வாயன்று நடத்திய ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகம் தெரிவித்துள்ளது.

பலியானவர்களில் இருவர் இட்லிப் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் கொல்லப்பட்டனர், மற்ற 10 பேர் அண்டை பகுதியான அலெப்போ மாகாணத்தின் மேற்குப் பகுதியில் கொல்லப்பட்டனர் என்று சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அலெப்போ மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீட்டில் தங்ககியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக கண்கணிப்பு குழுத்தலைவர் ராமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அலெப்போ மாகாணத்தின் கஃபர் தால் கிராமத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஆறு குழந்தைகள் அடங்குவர், முன்தினம் நடந்த தாக்குதலில் ஏற்கனவே அப்பகுதியில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இன்னும் இட்லிப் மாகாணம் மற்றும் அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகளை, ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர் குழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

கடந்த மூன்று நாட்களில், மேற்கு அலெப்போ உட்பட இட்லிப் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ரஷ்யாவின் தாக்குதல் பிரத்தியேகமாக இருந்தது என்று அப்தெல் ரஹ்மான் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா அறிவித்த போர் நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் மோதல்கள் அதிகரித்து வருகிறது.

கிளர்ச்சியாளர்களையும் ஜிகாதிகளையும் அலெப்போ நகரத்திலிருந்து மற்றும் அலெப்போவை டமாஸ்கஸுடன் இணைக்கும் மோட்டார் பாதையிலிருந்தும் விரட்டியடிக்க ரஷ்ய விரும்புகிறார்கள் என்று அப்தெல் ரஹ்மான் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...