இளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை! அப்படியென்ன உடை? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இளம்பெண்ணும் முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான Natalie Eva Marie அணிந்திருந்த உடையால் அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத நிலையில் அது தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த Natalie Eva Marie முன்னாள் மல்யுத்த வீராங்கனையாவார். இவர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் தனது கணவருடன் மெல்போர்ன் விமானத்தில் இருந்த விமானத்தில் அவர் ஏற முயன்றார்.

ஆனால் Natalie மிகவும் இறுக்கமான ஆடையை அதாவது உடற்பயிற்சி கூடத்தில் அணியும் ஆடையை அணிந்திருந்ததால் அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை.

இது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் டுவிட்டரில், நான் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்பவள், என் ஆடையை வைத்து எப்படி என்னை விமானத்தில் ஏற அனுமதி மறுப்பார்கள்?

என் கணவரும் அதே போன்ற உடையை தான் அணிந்திருந்தார், ஆனால் அவரை மட்டும் விமானத்தில் அனுமதித்தனர்.

ஆண், பெண் என எல்லோரையும் விமான நிறுவனம் சமமாக பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் குறித்த விமான நிறுவனத்தின் அறிக்கையில், மிகவும் சாதாரணமான அல்லது பொருத்தமற்றதாக கருதப்படும் ஆடைகளில் வரும் பயணிகள் விமானத்தில் ஏற மறுக்கப்படலாம். இதோடு ஜிம் உடைகள், கடற்கரை ஆடைகள், அசுத்தமான அல்லது கிழிந்த ஆடைகள் அணிவோருக்கும் விமானத்தில் ஏற கட்டுபாடுகள் உண்டு என தெரிவித்துள்ளது.

ஆனால் Natalie விடயத்தில் விமான நிறுவனம் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...