அழுகிய நிலையில் குளத்துக்குள் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் உடல்: 298 எலும்புகளும் கிடைத்ததால் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

செல்வந்தரான ஒருவரின் வீட்டிலிருந்த குளத்தில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்படதையடுத்து பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தைச் சேர்ந்த செல்வந்தரின் வாரிசான Apichai Ongwisit (40) என்பவரின் வீட்டின் பின்னால் உள்ள குளம் ஒன்றில், அவரது முன்னாள் காதலியான Warinthorn Chaiyachet (22) என்பவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம், தான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாக பொலிசாரிடம் புகாரளித்த Chaiyachet திடீரென மாயமானார்.

தற்போது அவரது உடல் Ongwisitஇன் வீட்டிலுள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chaiyachetஇன் முதுகில் வழக்கத்துக்கு மாறான ஒரு பெரிய ’டாட்டூ’ இருந்ததை வைத்தே அவரது உடல் அடையாளம் காணப்படது.

Chaiyachet காணாமல் போன சம்பவம் தொடர்பாக ஒருவர் துப்புக் கொடுத்தையடுத்து பொலிசார் Ongwisitஇன் வீட்டிலுள்ள குளத்தை சோதனையிட்டனர்.

அபடி சோதனையிடும்போது, Chaiyachetஇன் உடல் கனமான இரும்புக் கூண்டு ஒன்றுடன் சங்கிலியால் கட்டப்பட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தப்பட்டிருந்தது. Chaiyachet உயிருடன் இருந்தபோது, அவர் தன்னை விட்டு போய்விடக்கூடாது என்பதற்காக இரும்புக் கூண்டு ஒன்றிற்குள் அவரை அடைத்து வைத்திருப்பாராம் Ongwisit.

குளத்தை சோதனையிடும்போது 298 எலும்புகளும் கிடைத்ததையடுத்து, குறைந்தது மேலும் இரண்டு பெண்களாவது கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...