மண்ணுக்குள் உயிரோடு புதைந்த இளைஞர்! 27 நாட்களுக்கு பின்னர் நடந்த அதிசயம்... எப்படியிருந்தார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கரீபியனில் உள்ள Haiti நாட்டில் உயிரோடு மண்ணுக்கு அடியில் புதைந்த நபர் 27 நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்ட ஆச்சரிய சம்பவம் குறித்த செய்தி தற்போது வைரலாகியுள்ளது.

இந்த சம்பவமானது கடந்த 2010ஆம் ஆண்டு நடந்தது, Haiti-ல் அப்போது மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்ட நிலையில் 230,000 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் போது Evans Monsignac என்ற இளைஞர் அப்படியே கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மண்ணில் புதைந்தார்.

அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் 27 நாட்களுக்கு பின்னர் அப்படியொரு அதிசயம் நடக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தொடர் மீட்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மண்ணுக்குள் புதைந்திருந்த Evans உயிரோடு மீட்கப்பட்டார்.

அவர் கழிவுநீரை குடித்து உயிர் வாழ்ந்தது தெரியவந்தது.

வெளியில் எடுக்கும் போது வெறும் 40 கிலோ எடையுடன் இருந்த அவருக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது.

ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த Evans மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் இது குறித்து கூறுகையில், கடவுளின் கருணையால் தான் நான் உயிர் பிழைத்தேன். உணவு, சாப்பாடு இல்லாமல் உயிர் வாழ்ந்தேன்.

பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னர் கழிவுநீர் அந்த பகுதியில் இருந்து வெளியேறியடி இருந்தது.

அதை குடித்தே உயிர் வாழ்ந்தேன், ஆனால் ஒரு சமயம் நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன், ஆனால் எனக்கு அற்புதம் நடந்தது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...