தாய்ப்பாலை குடித்ததும் துடிதுடித்த பச்சிளங்குழந்தை: உயிரை காப்பாற்ற போராடிய பொலிஸ்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தாய்ப்பாலை குடித்ததும் மூச்சுத்திணறலால் துடித்த பச்சிளங்குழந்தையை அங்கிருந்த பொலிஸார் சிலர், விரைந்து செயல்ப்பட்டு காப்பாற்றியுள்ளனர்.

பிரேசில் நாட்டை சேர்ந்த எல்விஸ் மற்றும் கிறிஸ்டினா மார்க்ஸ் என்கிற தம்பதியினர், தங்கள் மகன் லூகாஸ் திடீரென சிவப்பு நிறமாக மாறியதோடு, சுவாசிக்க திணற ஆரம்பித்ததால், உடனடியாக சாவோ பாலோவில் உள்ள தங்கள் வீட்டில் இருந்து எர்மெலினோ மாடராஸ்ஸோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு நின்றிருந்த மூன்று இராணுவ அதிகாரிகள் புதிதாகப் பிறந்த குழந்தையின் முதுகில் கையால் தட்ட ஆரம்பித்து முதலுதவி சிகிச்சை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

குழந்தை சுவாசிக்கிறதா என்பதைக் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்க, ஒரு அதிகாரி முறையாக லூகாஸின் முதுகில் தட்டிக்கொண்டே இருந்தார்.

இதற்கிடையில் ஒரு பெண் இராணுவ அதிகாரி, மயக்கமடைந்த குழந்தையின் மீது வாய்-க்கு-வாய் வைத்து புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து குழந்தையின் கைகளும் கால்களும் அதிசயமான மற்றும் விரைவான மீட்சியில் நகரத் தொடங்கியுள்ளன. அடுத்த சில நொடிகளில், குழந்தை கதறி அழுதுள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை, தனது மனைவி தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சில நிமிடங்களில் இது நடந்ததாக கூறியுள்ளார்.

குழந்தையை குளிப்பாட்டுவதற்கு தயாரானபோது, திடீரென உடல் சிவப்பு நிறத்தில் மாறியது. மேலும், குழந்தை மூச்சு விட சிரமப்பட்டது என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக பிரேசிலிய உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...