ஈராக்கில் முக்கிய ஐ.எஸ் தீவிரவாதி கைது... பொலிசாருக்கு ட்ரக்கில் தூக்கி வரவேண்டிய சூழல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஈராக்கில் முக்கிய ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மிகவும் பருமனாக இருந்ததால், அவரை ட்ரக் ஒன்றின் பின்னால் தூக்கிப்போட்டு வரவேண்டிய சூழல் ஈராக் பொலிசாருக்கு ஏற்பட்டது.

Shifa al-Nima என்னும் அந்த நபர் ஒரு மதத்தலைவர் ஆவார். அவரது உத்தரவின்பேரில் பல கல்வியாளர்கள் கொல்லப்பட்டதுடன் மசூதி ஒன்றும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

Shifa ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் நிலையில், அவரது கைது சம்பவம் மிக முக்கியத்துவம், வாய்ந்த விடயமாக கருதப்படுகிறது.

Shifa கைது செய்யப்பட்ட தகவல் கேள்விப்பட்டதும், சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போராடியவராகிய Macer Gifford என்னும் பிரித்தானியர், Shifa பிடிபட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது, இந்த தீவிரவாதி பல ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ஒரு ஆள்.

இந்த மிருகம் வன்புணர்வும் செய்து கொலையும் செய்தது என்றார்.

வெளியான புகைப்படங்களில், Shifaவை பொலிசாரால் பொலிஸ் வாகனத்தில் ஏற்ற முடியாததால், ட்ரக் ஒன்றின் பின்னால் ஏற்றி, பாதுகாப்புக்கு இயந்திரத் துப்பாக்கி ஒன்றுடன் பொலிசார் ஒருவரையும் உட்கார வைத்திருப்பதைக் காணமுடிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...