ஓடும் வாகனத்திலிருந்து நடுரோட்டில் விழுந்த சடலம்: உதவாமல் கேலி செய்த மக்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்லும் வாகனம் ஒன்றிலிருந்து ஒரு சடலம் நடுரோட்டில் விழ, அதை வாகனத்தில் எடுத்து வைக்க உதவாமல், ஒருவர் கேலி செய்து சிரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினாவில் இறந்த உடலை வைக்கும் பைக்குள் வைக்கப்பட்டிருந்த உடல் ஒன்று, அதைக் கொண்டு செல்லும் அமரர் ஊர்தியிலிருந்து கீழே விழுந்துள்ளது.

தனது வாகனத்திலிருந்து சடலம் கீழே விழுந்துவிட்டதை உணர்ந்த சாரதி, வாகனத்தை பின்னோக்கிக் கொண்டு வருகிறார்.

பின்னர் அவர் வாகனத்திலிருந்து இறங்கி, மீண்டும் அந்த உடலை வாகனத்தில் ஏற்ற முயல, இதை கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு பொலிசார் உதவிக்கு ஓடுகிறார். இருவருமாக அந்த உடலை மீண்டும் அந்த வாகனத்தில் ஏற்றுகிறார்கள்.

அதை கடந்து செல்லும் ஒரு வாகனம் கூட, உதவிக்காக நிற்கவில்லை. அத்துடன், இதை கவனித்துக்கொண்டிருப்பவர்கள், உதவி ஏதும் செய்யாததோடு, அதை கேலி செய்து சிரிக்கவும் செய்கிறார்கள்.

பல வெளிநாடுகளில் இறந்த உடலை அவமதிப்பது குற்றமாகும்.

இருந்தும், என்ன நடந்தாலும் அதை வேடிக்கை பார்ப்பதோடு, வீடியோ எடுக்கும் கலாச்சாரம் சாதாரணமாகிவிட்ட இந்த உலகில், அந்த உடலை மீட்க உதவாமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை, ஆனால், அதை கேலி செய்யும் விதம் கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...