உக்ரேன் விமானம் சுடப்பட்ட விவகாரம்... ஈரானில் வெடித்தது ஆர்ப்பாட்டம்: பதவி விலக கோரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம், மனிதத் தவறால் நேர்ந்தது என ராணுவ தளபதி ஒப்புக்கொண்டுள்ள நிலையில் தலைநகர் தெஹ்ரானில் போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கானோர் ஈரான் தலைமை தளபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தெஹ்ரானில் அமைந்துள்ள ஷெரீப் பல்கலைக்கழக வளாகத்தில் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முழக்கமிடப்படுகிறது.

மட்டுமின்றி தலைமை தளபதி பதவி விலகினால் மட்டும் போதாது, நேர்மையான விசாரணையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

176 அப்பாவி மக்களை கொன்றொடுக்கிய விவகாரம் மன்னிக்க முடியாதது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானை பொறுத்தமட்டில் தலைமை தளபதி என்பவர் அந்த நாட்டின் உச்ச தலைவராக போற்றப்படும் அலி கோமெய்னி என்பவராகும்.

முறைகேடு அல்லது ஊழல்கள் தொடர்பாக அதிகாரிகள் ராஜினாமா செய்வது ஈரானில் மிகவும் அரிதானது அல்லது முன்னோடியில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...