நான் வேண்டாம் என்று கூறினேன்! அவர் கேட்கவில்லையே: உக்ரேன் விமானியின் மனைவி கண்ணீர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உக்ரேன் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதை ஒப்புக் கொண்ட நிலையில், விமானியின் மனைவி கணவரை நான் செல்ல வேண்டாம் என்று கூறியதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.

கடந்த புதன் கிழமை உக்ரேன் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஈரான் இராணுவத்தின் ஏவுகணையால், மனித பிழை காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானத்தில் ஊழியர்கள் உட்பட 176 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, அது ஏதோ குண்டு பொழியும் விமானம் என்று நினைத்து ஈரான் இராணுவத்தினர் இடை மறித்து தாக்கியதாக ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த விமானத்தின் விமானியான Gaponenko-வின் மனைவி Katerina Gaponenko பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ்க்கு கணவனுடன் நடந்த இறுதி உரையாடல் குறித்து கூறியுள்ளார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர் கூறுகையில், அமெரிக்கா-ஈரான் இடையே இருக்கும் பதற்றம் காரணமாக விமானம் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அவர் செல்ல வேண்டியிருந்தது.

நான் உடனே நீ செல்ல வேண்டாம் என்று கூறினேன், அதற்கு அவர் நான் இப்போது எப்படி செல்லாமல் இருக்க முடியும்? நான் இல்லையென்றால் அங்கு வேறு யாரும் எனக்கு பதில் இல்லை, நான் செல்ல வேண்டும் என்று கூறினார்.

நான் இங்கேயே இருந்து விடு என்று கூறினேன், ஆனால் பறப்பதற்கு தயாராகி சென்றுவிட்டதாக கண்கலங்கி கூறினார்.

மேலும் Gaponenk பல வருடம் அனுபவமிக்க திறமையான விமானி என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...