தளபதி குவாசிமின் படுகொலை எங்களுக்கு சாதகமே: கொக்கரிக்கும் ஐ.எஸ் ஆதரவாளர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானிய முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலை தங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என ஐ.எஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

குவாசிமின் படுகொலையால் இனி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தங்களின் வளர்ச்சி மெதுவாக சீராகும் எனவும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பானது முற்றாக அழிக்கப்பட்டது என உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டாலும்,

ஈராக் மற்றும் சிரியா பகுதிகளில் ஐ.எஸ் அவர்களின் சக்திவாய்ந்த இருப்பைப் பராமரித்து வருகிறது.

மட்டுமின்றி தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் தங்கள் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டும் பணியையும் ரகசியமாக மேற்கொண்டு வருகிறது.

குவாசிமின் படுகொலைக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கத்திய ராணுவத்தின் பங்களிப்பு ஈராக்கில் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகளை வெளியேற பாராளுமன்றத்தில் பிரேரணை முன்னெடுக்கப்பட்டும் உள்ளது.

அமெரிக்க தூதரகங்கள் மீது ஈரானின் குத்ஸ் படைகள் குறிவைத்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே குவாசிம் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விளக்கமளித்தாலும்,

மத்திய கிழக்கில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் இருப்பை பராமரிக்கவே குவாசிம் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு கருத்து உலவுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...