176 பேரை பலிகொண்ட விமான விபத்து: உக்ரேனிய ஜனாதிபதியின் முக்கிய கோரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில், அது மனிதத் தவறு என அந்த நாட்டின் ஜனாதிபதியே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தளபதி குவாசிம் சுலைமானி விவகாரத்தில் பதற்றம் இறுகிய நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்தது.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் இடையே, 176 பயணிகளுடன் சென்ற உக்ரேனிய விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

முதலில் கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டாலும்,

உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, ஈரான் அரசு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.

ஈரானின் ஜனாதிபதியே, விமான விபத்தானது மனித தவறுகளால் ஏற்பட்ட ஏவுகணை தாக்குதல் என தமது டுவிட்டர் பக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்த விவகாரம் தொடர்பில் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில், இந்த விவகாரத்திற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கனேடிய பிரதமரும் தனது நிலைப்பாட்டை முன்னரே தெரிவித்திருந்தார்.

ஏவுகணை தாக்குதலில் சிக்கிய உக்ரேனிய பயணிகள் விமானத்தில் 82 ஈரானியர்களும், 65 கனேடியர்களும் மற்றும் சுவீடன், ஆப்கானிஸ்தான், ஜேர்மனி, இங்கிலாந்து நாட்டவர்களும் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...