பேரழிவு... மன்னிக்க முடியாது! 176 பேர் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து ஈரான் அதிபர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானம் சம்பவம், மன்னிக்க முடியாத குற்றம் என்று அந்நாட்டு அதிபர் ஹாசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை ஈரானில் 176 பேர் சென்ற பயணிகள் விமானத்தை ஈரான் தான் சுட்டு வீழ்த்தியதாக அந்நாடு ஓப்புக் கொண்டது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான், அமெரிக்காவுடன் இருந்த போர் பதற்றம், மனித பிழை காரணமாக இது நடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஈரான் நாட்டு தலைவர்கள் பலரும் தங்கள் வருத்ததை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மனிதப் பிழையின் காரணமாக ஏற்பட்ட ஏவுகணை தாக்குதல் காரணமாகவே உக்ரேனிய விமானத்தின் பயங்கரமான விபத்து மற்றும் 176 பேரின் மரணம் நிகழ்ந்தது என ஆயுதப்படைகளின் உள் விசாரணையில் முடிவு தெரியவந்துள்ளது.

இந்த மன்னிக்க முடியாத தவறு தொடர்பாக சட்ட விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...