ஓமான் சுல்தான் கபூஸ் மறைந்தார்! உயர் எச்சரிக்கையால் பிராந்தியத்தில் இராணுவம் குவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஓமான் சுல்தான் கபூஸ் பின் சைட் அல் சைட் வெள்ளிக்கிழமை மாலை இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற 79 வயதான கபூஸ், 1970-ல் ஆட்சி செய்து வருகிறார். ஓமானின் முன்னாள் நாட்பு நாடான பிரித்தானியாவின் உதவியுடன் சதிகளை முறியடித்து கபூஸ் ஓமானின் சுல்தானாக பொறுப்பேற்றார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

சுல்தான் கபூஸ் திருமணமாகாதவர், அவருக்கு வாரிசு இல்லை. அவர் தனக்கு பிறகு யார் சுல்தானாக பொறுப்பேற்க வேண்டும் என வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

சிம்மாசனம் காலியாக உள்ள நிலையில், 1996-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி ஆளும் குடும்பம் சுல்தானை தேர்ந்தெடுக்க வேண்டும்.

google

அவர்கள் தேர்ந்தெடுக்க தவறினால், இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், உச்ச நீதிமன்றத் தலைவர்கள் மற்றும் இரண்டு ஆலோசனைக் கூட்டங்களின் தலைவர்கள் அடங்கிய ஒரு குழு, கபூஸால் சீல் வைக்கப்பட்ட கடிதத்தில் ரகசியமாக எழுதப்பட்ட நபரை அதிகாரத்தில் அமர்த்தும்.

பொது மற்றும் தனியார் துறைகளுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 40 நாட்களுக்கு கொடிகள் அரை கம்பத்தில் பறக்கப்பட உள்ளன என்று உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்தன.

கபூஸ், பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், டிசம்பர் தொடக்கத்தில் ஒரு வாரம் பெல்ஜியத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றார்.

ஓமானின் கபூஸ் பின் சைட் இறந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உயர் எச்சரிக்கை நிலையால் தலைநகர் மஸ்கட்டில் இராணுவம் மற்றும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓமான் சுல்தான் கபூஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...