ஈராக்கிலிருந்து வெளியேறும் கோரிக்கையை அப்பட்டமாக நிராகரித்த அமெரிக்கா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஈராக்கிலிருந்து துருப்புக்களை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையை அமெரிக்கா அப்பட்டமாக நிராகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி, அமெரிக்க ஆளில்லா விமானம் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால் இருநாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வந்ததால் இருநாடுகளுக்கும் இடையே தீவிரத்தன்மை அதிகரித்து வந்தது.

இதனையடுத்து தலைநகர் மற்றும் தெற்கு ஈராக்கில் ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். பலர், ஈரான் மற்றும் அமெரிக்கா இருவரையும் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்தனர்.

இதுதொடர்பாக ஒன்றுகூடிய நாடாளுமன்றத்தில், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு துருப்புகளும் உடனடியாக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு ஆதரவாக உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மேலும், வியாழக்கிழமை இரவு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவிடம் தொலைபேசியில் பேசிய ஈராக் அமைச்சகம், ஈராக்கில் அண்மையில் நடந்த அமெரிக்க தாக்குதல் ஈராக்கிய இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் விதிமுறைகளை மீறுவதாகும் என்று கூறியது.

இதனால் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை வெளியேறுமாறு பிரதமர் அடெல் அப்துல்-மஹ்தி சமிக்ஞை செய்தார்.

இந்த நிலையில் அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான ஈராக்கின் கோரிக்கையை அமெரிக்கா அப்பட்டமாக நிராகரித்துள்ளது.

மேலும், "மத்திய கிழக்கில் அமெரிக்கா நன்மைக்கான ஒரு சக்தி" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...