அமெரிக்காவுக்கு தரப்படும் பேரடி என்ன தெரியுமா? ஈரானிய ஜனாதிபதியின் முக்கிய திட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா துருப்புகள் அனைத்தையும் வெளியேற்றுவதே குவாசிம் சுலைமானிக்கு அளிக்கப்படும் இறுதி அஞ்சலி என ஈரான ஜனாதிபதி ஹசான் ருஹானி தெரிவித்துள்ளார்.

இதுவே அமெரிக்காவுக்கு அளிக்கப்படும் பேரிடடியாகவும் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இரவு ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங்களின் மீது ஈரான் தாக்குதல் முன்னெடுத்துள்ளதை தொடர்ந்து ருஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குவாசிம் படுகொலைக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்கும் என முன்னதாகவே தங்களை எச்சரித்திருந்ததாக ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதனன்று நள்ளிரவில் தங்களுக்கு ஈரானிடம் இருந்து ரகசிய தகவல் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த தாக்குதலானது அமெரிக்க துருப்புகள் இருக்கும் இடங்களில் மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஈரானிய பாராளுமன்றத்தில் பேசிய ரூஹானி ஈராக்கில் இருந்து மொத்த அமெரிக்க துருப்புகளும் வெளியேற்றப் பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...