நான்கு மாடிக் கட்டிடத்தின் கைப்பிடி இல்லாத சுவரில் நடக்கும் குழந்தை: ஒரு திடுக் வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஒரு குழந்தை நான்காவது மாடியில் உள்ள தனது வீட்டில் கைப்பிடி இல்லாத ஒரு சுவரில் நடக்கும் திடுக்கிடவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஸ்பெயினிலுள்ள Tenerife என்ற இடத்தில் அமைந்துள்ள ஏழு மாடிக்கட்டிடம் ஒன்றின் நான்காவது மாடியில், ஒரு குட்டிப் பெண் குழந்தை பால்கனி சுவரைத் தாண்டி வெளியேறி, கைப்பிடி இல்லாத சுவரில் நடப்பதை அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளார்கள்.

அந்த பெண்ணின் தாயார் வீட்டுக்குள் குளித்துக்கொண்டிருக்கும்போது, இந்த குழந்தை வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாக கருதப்படுகிறது.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், சர்வசாதரணமாக பால்கனி தடுப்புக் கம்பியைத் தாண்டி வெளியேறும் அந்த குழந்தை கைப்பிடி இல்லாத அந்த சுவரில் நடப்பதைப் பார்த்தால் நமக்கு திக்கென்கிறது.

ஆனால் அந்த குழந்தையோ, பயமறியாது ஒரு முறைக்கு இரு முறை அந்த சுவரில் விடுவிடுவென்று நடக்க, அத்துடன் வீடியோ முடிவடைந்துவிடுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...